இந்திய வீட்டுத்திட்ட பயணாளிகள் தெரிவில் மன்னார் மாவட்டத்தில் முறைகேடு-பாதிக்கப்பட்ட மக்கள் செல்வம் எம்.பி யிடம் முறைப்பாடு.
இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் பயணாளிகள் தெரிவின் போது பாரிய முறைக்கேடு இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
1.இந்திய வீட்டுத்திட்டத்தில் மன்னாரில் பயணாளிகளை தெரிவு செய்ததில் மன்னார் பிரதேச செயலகம் பாரம்பட்சமும் ,காணி மோசடியும் -ஆதாரம் இணைப்பு~{சிறப்புசெய்தி}
-இந்திய வீட்டுத்திட்டமானது இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய,பின்தங்கிய மக்களுக்காக வழங்கப்பட்டதாகும்.ஆனால் மன்னார் மாவட்டத்தில் இந்த தெரிவில் பாரிய முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளதை நாங்கள் அறிகின்றோம்.
தற்போது இந்திய வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டத்திற்காண பயணாளிகள் தெரிவு என கூறி பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் யுத்தத்தினால் பாதிக்கப்படாத,பணவந்தர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவர்களின் தெரிவிற்கு அதிகாரிகள் சிலர் காரணமாக உள்ளனர்.
எனவே இந்த தெரிவின் போது உண்மையிலேயே பாதீக்கப்பட்ட,பின்தங்கிய மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என பாதீக்கப்பட்ட மக்கள் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இடம் முறையிட்டுள்ளனர்.
இவ்விடையம் தொடர்பில் தான் உடனடியாக இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று தெரிவித்தார்.
இந்திய வீட்டுத்திட்ட பயணாளிகள் தெரிவில் மன்னார் மாவட்டத்தில் முறைகேடு தொடர்பாக மன்னார் இணையம் வெளியிட்ட செய்திகள்
இந்திய வீட்டுத்திட்ட பயணாளிகள் தெரிவில் மன்னார் மாவட்டத்தில் முறைகேடு-பாதிக்கப்பட்ட மக்கள் செல்வம் எம்.பி யிடம் முறைப்பாடு.
Reviewed by Admin
on
November 22, 2012
Rating:

No comments:
Post a Comment