மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரையில் கடற்படையினர் கெடு பிடி-300 'வலைச்சல் வலை' மீன் பிடி தொழிலாளர்கள் பாதிப்பு.
மன்னார் தாழ்வுபாட்டு கடலில் இரவு நேர மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த 9 ஆம் திகதி (9-11-2012) அதிகாலை படகில் இரண்டு மீனவர்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரின் படகு வேகமாக வந்து குறித்த படகுடன் மோதிய சம்பவத்தில் 2 மீனவர்களும் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மக்களும்,அக்கிராம மக்களும் கடற்படையினரை குற்றம் சுமத்தியுள்ள போதும கடற்படையினர் குறித்த விபத்துத் தொடர்பில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என மறுப்புத்தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த மீனவர்களை பலிவாங்கும் நோக்கில் தற்போது கடந்த 10 தினங்களுக்கு மேலாக தாழ்வுபாட்டு கடலில் 'வலைச்சல் வலை' தொழிலில் ஈடுபடும் 300 மீனவர்களை கடற்படையினர் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர். இந்த 300 மீனவர்களும் கடந்த காலங்களில் சுருக்கு வலையை பயண்படுத்தி மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சுருக்கு வலை தடை செய்யப்பட்ட நிலையில் தாழ்வுபாட்டு மீனவர்களினால் 'வலைச்சல் வலை' தொழிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த தொழிலானது கடற்கரையில் மீன்கள் கூட்டமாக வரும் போது 'வலைச்சல் வலை'யினை பயண்படுத்தி குறித்த மீன் கூட்டத்தினை வலைத்து பிடிப்பதே ஆகும். இந்த தொழிலை தாழ்வுபாட்டு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் தமது தொழிலாக மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி அதிகாலை இடம் பெற்ற சம்பவத்தை தொடர்ந்து தாழ்வுhட்டு கடற்கரையில் உள்ள கடற்படையினர் கடந்த 10 ஆம் திகதி முதல் எங்களை தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளதாக பாதீக்கப்பட்ட மீனவர் ஒருவர் தெரிவித்தார். இதனால் இத்தொழிலை மேற்கொள்ளும் ஒவ்வெரு மீனவர்களுடைய குடும்பங்களும் தற்போது பட்டினிச்சாவை எதிர் நோக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதாக அந்த மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் இவ்விடையத்தில் தலையிட்டு எம்மை மீண்டும் குறித்த தொழிலை செய்ய அனுமதியை பெற்றுத்தரும பாதீக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
November 21, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment