மன்னார் நீதிமன்றம் மீதான தக்குதல் : 5 நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 5 சந்தேக நபர்களையும் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட மேலதிக நீதிவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் மேல் நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதிவான் நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களிலும் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே குறித்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் மேற்படி உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் மன்னார் நீதிமன்றம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதோடு பொது சொத்துகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தப்பட்டது.
இதன்போது குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கட்டம் கட்டமாக 43 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பின் மன்னார் நீதிமன்றம் மற்றும் மன்னார் மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் இடம்பெற்ற வழங்கு விசரணைகளினைத் தொடர்ந்து 38 சந்தேக நபர்கள் கட்டம் கட்டமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஏனைய 5 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 சந்தேக நபர்களும் மீண்டும் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்கள் சார்பில்
ஆஜரான சட்டத்தரணியின் பிணை மனுக் கோரிக்கையினை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
இதேவேளை, மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் சந்தேக நபர்களில் ஒருவர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தலைமறைவாகியுள்ளார். இதுவரை பொலிஸார் அவரை கைது செய்யாத நிலையிலேயே குறித்த 5 சந்தேக நபர்களுக்குமான பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தலைமறைவாகியிருக்கும் குறித்த சந்தேக நபரை உடன் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மன்னார் பொலிஸாருக்கு பகிரங்க பிடியாணை ஒன்றை நீதிவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க பிறப்பித்துள்ளார்.
அத்துடன் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் விசாரனைக்கு எடுக்குமாறு மன்னார் மாவட்ட மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Reviewed by Admin
on
November 20, 2012
Rating:
No comments:
Post a Comment