மக்கள் பிணக்குகளைத் தீர்ப்பதில் மன்னார் மத்தியஸ்தர் சபை மும்முரம்
ஐந்து ரூபா முத்திரை கட்டணத்துடன் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மத்தியஸ்தர் சபை தனது நீதிச்சேவையை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தொடர்வதாக அதன் தலைவர் பிரின்ஸ் டயஸ் தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் நேற்று கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயங்க ஆரம்பித்துள்ள மன்னார் மத்தியஸ்த சபை, மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும், பிணக்குகளையும் சமாதானமாகவும், புரிந்துணர்வுடனும் தீர்த்து வைத்திருக்கின்றது.
குறிப்பாக வங்கிகளால் அறவிடப்படமுடியாத கடன்கள் மற்றும் மேலதிக பற்றுக்கள், காணித்தகராறுகள், அடிதடி போன்ற சிறு பிணக்குகளுக்கு நாம் விரைவானதும் சுமுகமானதுமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஐந்து ரூபா முத்திரை கட்டணத்துடன் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.
எனவே முறைப்பாட்டாளர்கள் தங்களது பிணக்குகளுக்கு தீர்வு காண விரும்பினால் மாதத்தின் முதல் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியும்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் மக்கள் தங்கள் முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியும். இறுதி ஞாயிற்றுக்கிழமை சபை கூடித் தீர்ப்பு வழங்கும் என்றார் அவர்.
மக்கள் பிணக்குகளைத் தீர்ப்பதில் மன்னார் மத்தியஸ்தர் சபை மும்முரம்
Reviewed by NEWMANNAR
on
November 19, 2012
Rating:

No comments:
Post a Comment