யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட மக்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு
யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேறிய மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு அவர்களின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் உயிலங்குளம் விவசாய பயிற்சிக்கல்லூரியில் வைபவ ரீதியாக இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் கடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேறிய விவசாயிகளுக்கு தொழில் நுற்ப உதவியுடன் பிரதேச அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் பெருமதி வாய்ந்த விவசாய உபகரணங்கள் முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிகத்துரை அமைச்சர் றிஸாட் பதீயுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாரூக்,கமநல சேவைகள் திணைக்களத்தின் செயலாளர்,கமநல சேவைகள் திணைக்களத்தின் மாகாண பனிப்பாளர்,மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்;,பிரதேச செயலாளர்கள்,உதவி அரசாங்க அதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்காண மக்களும் கலந்து கொண்டனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இடம் பெற்ற குறித்த நிகழ்வு றீட்டா செயல் திட்டத்தின் கீழ் இடம் பெற்றது.இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம்,கிருமி நாசினி தெழிக்கும் கருவி,பாரம் தூக்கும் வண்டி ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது.
யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட மக்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு
Reviewed by NEWMANNAR
on
November 18, 2012
Rating:
No comments:
Post a Comment