மன்னாரில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம்.பட இணைப்பு.,
இந்திய வீட்டுத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் அநீதியான முறையில் பகிரப்பட்டமையினை கண்டித்து மன்னார் பிரஜைகள் குழுவும்,மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு மற்றும் காணியுரிமைக்கான மக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் அமைதியான முறையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.
யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து பல இன்னல்களைக்கடந்து மீள் குடியேறிய மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வில் இடம் பெற்ற அநீதியைச் சுட்டிக்காட்டியும்,நீதியான முறையில் பகிர்வுகள் இடம் பெற வேண்டும் என வலியுறித்தியும்,அதே போல் யுத்தத்தில் இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேறி தொழில் துறைகளை இழந்த மீனவர்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட மீன்பிடிப்படகுகளையும்,உபகரணங் களையும் வழங்குவதில் காட்டப்படும் பாரபட்ச செயற்பாடுகளை கண்டித்தும் அவற்றின் தெரிவிலும்,வினியோகத்தில் சீர் செய்யுமாறு கோரி குறித்த உண்ணாவிரதம் இடம் பெற்று வருகின்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் இருந்து அனைத்து கிராமங்களையும் சேர்ந்த பல நுர்ற்றுக்கணக்காண மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக மீள் குடியேற்றக்கிராம மக்களும் அதிகலவில் கலந்து கொண்டுள்ளனர்.
நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதி நிதிகள்,அருட்தந்தையர்கள் என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 3 மணியளவில் மக்களின் கோரிக்கை அடங்கிய மஜர் மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம்.பட இணைப்பு.,
Reviewed by NEWMANNAR
on
December 04, 2012
Rating:
No comments:
Post a Comment