மன்னாரில் இம்முறை பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் மன்னார் பொது விளையாட்டரங்கில் அமைக்க ஏற்பாடு.
எதிர்வரும் பண்டிகைக்காலங்களை முன்னிட்டு மன்னாரில் அமைக்கப்படவுள்ள தென் பகுதி வியாபாரிகளின் வியாபார நிலையங்கள் அனைத்தும் மன்னார் பொது விளையாட்டரங்கில் அமைக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள பிரதான வீதியில் குறித்த பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டமையினால் மன்னார் வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதோடு போக்குவரத்துக்களும் பாதிப்படைந்து வந்தது.
இந்த நிலையில் இம்முறையும் குறித்த பிரச்சினைகள் இடம் பெறக்கூடாது என்ற தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் அணமையில் விசேட கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
இதன் போது சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டு குறித்த வர்த்தக நிலையங்களை இம்முறை பொது விளையாட்டு மைதான பகுதியில் அமைக்க தீர்மானத்தை முன்வைத்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அனைத்தும் இம்முறை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் இம்முறை பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் மன்னார் பொது விளையாட்டரங்கில் அமைக்க ஏற்பாடு.
Reviewed by NEWMANNAR
on
December 04, 2012
Rating:

No comments:
Post a Comment