மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம்-6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 சந்தேக நபர்களில் 06 சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெரில் மன்னார் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸாரினால் கட்டம் கட்டமாக 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு விசாரனைகள் மன்னார் நீதிமன்றத்திலும்,மன்னார் மேல் நீதிமன்றத்திலும் இடம் பெற்று வந்தது.
இந்த நிலையில் 6 சந்தேக நபர்களைத்தவிர ஏனைய அனைவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் குறித்த 6 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரனைகள் நீண்டகாலமாக மன்னார் மேல நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு சந்தேக நபர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு விசாரனை இன்று வியாழக்கிழமை மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் சந்தேக நபர்கள் ஒவ்வெருவரும் தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரிரப்பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு குறித்த 6 சந்தேக நபர்களும் ஒரு மாதத்தில் இரண்டு ஞர்யிற்றுக்கிழமைகளில் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என உத்தரவிட்டார்.

Reviewed by NEWMANNAR
on
December 06, 2012
Rating:

No comments:
Post a Comment