அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் நலன்புரி அமைச்சினால் மன்னாரில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல். (படங்கள்)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு  மேம்பாடு மற்றும் நலன்புரி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் குடும்பங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும்,அதற்காண தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.


இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாடு மற்றும் நலன்புரி அமைச்சின் மேலதிக பொது முகாமையாளர் திருமதி கிசோலிபெரேரா,வடமாகான முகாமையாளர் குருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-மன்னார் மாவட்டத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடிச் சென்றுள்ள நிலையில் பலர் குடும்பங்களுடன் தொடர்புகள் எவையும் அற்ற நிலையில் உள்ளனர்.இதே வேவைளை மன்னார் மாவட்டத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் சுமார் 25 சிறார்கள் சிறுவர் காப்பகங்களில் வைத்து பராமறிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் தமது பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் குறித்த குடும்பத்தாறுடன் உறவினர்கள் எவ்வாறு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் அதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் நலன்புரி அமைச்சின் பங்களிப்பக்கள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இதன் போது பிரதேச செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.



  
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் நலன்புரி அமைச்சினால் மன்னாரில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல். (படங்கள்) Reviewed by NEWMANNAR on December 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.