அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம்-சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு.


மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி(17-12-2012) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

-மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 43 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.இவர்களில் அணைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 6 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலே குறித்த 7 சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தொடர்ந்தும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான இ.கயஸ் பல்டானோ நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம்-சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு. Reviewed by NEWMANNAR on December 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.