அரசாங்கத்தினால் குறைபாடுகளுடன் வழங்கிய வெள்ள நிவாரணத்தை திருப்பி அனுப்பிய குஞ்சுக்குளம் கிராம மக்கள்-
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு அரசாங்கம் உரிய முறையில் நிவாரணம் வழங்காத நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கனடா கிளையும்,கனடா மறுவாழ்வுக் கழகமும் இணைந்து அத்தியாவசிய உலர் உணவுப்பொருட்களை நேற்று திங்கட்கிழமை வழங்கி வைத்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாகவும் ,வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் இலங்கையின் வடக்கில் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் தமிழர் தாயகப்பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தினாலும்,அரச அமைச்சர்,அரச பாரளுமன்ற உறுப்பினர்களினாலும் வழங்கப்படும் அனர்த்த உதவிகள் தமிழ் மக்களை சென்றடைவதில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கனடா கிளையும்,கனடா மறுவாழ்வுக் கழகமும் இணைந்து அத்தியாவசிய உலர் உணவுப்பொருட்களை நேற்று (31-12-2012) குச்சுக்குளம் மக்களிடம் கையளித்தனர். இதன் போது குறித்த உலர் உணவுப்பொருட்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இலங்கைக்கான இளைஞர் அணி தலைவர் வி.எஸ்.சிவகரன் வழங்கி வைத்தார்.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் லெம்பேட்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர்களான பரஞ்சோதி,எமில் சவுந்தர நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கலந்து கொண்ட குஞ்சுக்குளம் மக்கள் கருத்துத்தெரிவிக்கையில்,,,
மன்னார் மவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்படைந்திருந்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டச்செயசகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவு பொருட்களில் அதிகமானவை முசலி பகுதிக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குஞ்சிக்குளம் கிராமத்திற்கு சொற்ப அளவு உலர் உணவுகளே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த உலர் உணவுப்பொருட்களை நாங்கள் பொற்றுககொள்ளாது திருப்பி அனுப்பி வைத்துள்ளோம்.அவை உத்தியோக பூர்வமாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்படவுள்ளது. எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை பாரிய கஸ்டத்தின் மூலம் தரை மார்க்கமாக கொண்டு வந்து தந்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
January 01, 2013
Rating:
No comments:
Post a Comment