அண்மைய செய்திகள்

recent
-

முசலியில் பல கிராமங்களுக்கு போக்குவரத்துச் சேவை இல்லாமை- முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் எஸ்.சுனேஸ்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் போக்குவரத்துச் சேவை இல்லாததன் காரணத்தினால் குறித்த கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை தெரிவித்தார்.



 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

 முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் மாதாந்தகுழுக் கூட்டம் கடந்த 16 ஆம் திகதி முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் தலமையில் இடம் பெற்றது. இதன் போது முசலியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதில் உள் வாங்கப்பட்ட கிராமங்களான அரிப்பு,கொண்டச்சிக்குடா,சவேரியார் புரம் சிலாவத்துறை,சிறி பொற்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 நாளாந்தம் இப்பகுதி மக்கள் பலபிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருப்பதனை பிரஜைகள் குழு அவதானித்துக் கொண்டு இருப்பதோடு மக்களும் பல தடவைகள் அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டும் இன்னமும் அதிகாரிகள் மக்களை புறக்கணித்துக் கொண்டு இருப்பதாக முசலி பிரதேசபிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு.சுனேஸ் தெரிவித்தார்.

 குறிப்பாக மன்னாரில் இருந்து அரிப்பிற்கு இ.போ.ச.பஸ் சேவையானது காலையில் 7.45 மணிக்கு முருங்கன் ஊடாக சிலாவத்துறையினை வந்தடைந்து மீண்டும் கொக்குப்படையான் வரைக்கும் சென்று திரும்புவது தான் வழமையான சேவையாக காணப்பட்டது. இருந்த போதிலும் கடந்த பலகாலமாக இவ் சேவையானது புறக்கணிக்கப்பட்ட நிலையில் முசலி பிரதேச செயலகத்துடன் மக்களை இறக்கி விட்டு செல்லக்கூடிய நிலை தற்போது காணப்படுகின்றது.

 இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் , வயோதிபர்கள் கற்பிணிதாய்மார்,பாடசாலை மணவர்கள் என பலரும் 3கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பாதை சீர் இல்லை என அதிகாரிகளினால் கூறப்பட்ட போதிலும் தற்போது சரியான முறையில் பாதை சீர் செய்யப்பட்டுள்ளது.

 இருந்த போதிலும் மக்கள் தேவைகளை கருதி எங்கு சென்றாலும் முச்சக்கர வண்டியினை நம்பி செல்ல வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிலாவத்துறையில் இருந்து கொண்டச்சிக்குடாவிற்கு செல்வதென்றால் 300ரூபா கொடுத்து தான் முச்சக்கர வண்டியில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டமக்களால் கூறப்படுகின்றது.

 இது குறித்து முதலில் மன்னார் போக்குவரத்து சபைக்கு முதல் கட்டமாக மனு ஒன்றினை அனும்பும் படியாகவும் இதற்கான சரியான பதிலினை எமது பிரஜைகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் படியாகவும் இல்லையேல் முசலி பிரதேச பிரஜைகள் குழு போராட்டத்தில் குதிப்போம் எனவும் முசலி பிரதேசபிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு.சுனேஸ் தெரிவித்தார். எனவே மக்கள் நலன் கருதி இதற்கான சரியான தீர்வு திட்டத்தினை மக்களுக்கு வழங்குமாறு முசலி பிரதேசபிரஜைகள் குழு ஊடாககேட்டுக் கொள்ளுகின்றோம்.என தெரிவித்தார்.
முசலியில் பல கிராமங்களுக்கு போக்குவரத்துச் சேவை இல்லாமை- முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் எஸ்.சுனேஸ் Reviewed by Admin on February 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.