மன்னாரில் இதுவரை ஊழியர் சேமலாப நிதிப்பங்களிப்பு செய்யாது தொழிலாளர்களை கொண்டுள்ள தொழில் தருநர்கள் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்
மன்னார் நகரப் பகுதியில் உள்ள கடைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் என்பனவற்றில் கடந்த இரு தினங்களில் தொழில் திணைக்களத்தினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் திரு.கே.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இப்பரிசோதனையானது வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் திரு.கே.கனகேஸ்வரன் மற்றும் உதவித் தொழில் ஆணையாளர் திருமதி. எல்.ஆனந்தநடராஜா ஆகியோரின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இந்நடவடிக்கையில் யாழ்ப்பாணம்,வவுனியா,கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இச்செயற்பாட்டின்போது சுமார் 65 கடைகள், 15 நிறுவனங்கள் என்பன பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இவற்றுள் 30 புதிய நிறுவனப் பதிவுகளுக்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதுடன், நிலுவையாக காணப்பட்ட ஊழியர் சேமலாப நிதிக்குரிய கொடுப்பனவு சார்பாக 05 நிறுவனங்களில் இருந்து காசோலைகள் பெறப்பட்டதுடன் சில நிறுவனங்களின் நிலுவைகளினை அறவிடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 25 கடைகளின் ஆவணங்களினை பரிசோதனை செய்வதற்கேதுவாக மன்னார் தொழில் அலுவலகத்திற்கு உரிய பதிவேடுகளுடன் சமூகம் தருமாறும் அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வு தொடர்பாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் தகவல் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் பரிசோதனை நடவடிக்கை விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், ஊழியர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதியினை பெற்றுக் கொடுப்பதற்கும், அவர்களின் கடமை நேரம், ஊதியம், விடுமுறை மற்றும் நலன்புரி விடயங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், எமது எதிர்கால பரிசோதனைக்கு முன்பாக இதுவரை ஊழியர் சேமலாப நிதிப்பங்களிப்பு செய்யாது தொழிலாளர்களை கொண்டுள்ள தொழில் தருநர்கள் தாமாகவே முன்வந்து உரிய பதிவுகளை மேற்கொள்ளல் சாலச்சிறந்ததொரு நடவடிக்கையாகும் எனவும் தெரிவித்தார்.

Reviewed by Admin
on
February 18, 2013
Rating:

No comments:
Post a Comment