நானாட்டான் கோட்ட மட்ட விளையாட்டுக்கள் - 2013 (படங்கள் இணைப்பு)

காலநிலை சீரின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நானாட்டான் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான 2013ம் ஆண்டிற்கான மெய்வன்மை திறனாய்வுப் போட்டிகள் 21.02.2013 மற்றும் 22.02.2013 (வியாழன், வெள்ளி) ஆகிய தினங்களில் முருங்கன் வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடந்தேறியது.
இவ் விளையாட்டு விழா நானாட்டான் கோட்ட கல்விப் பணிப்பாளா் திரு.எஸ்.தாவீது அவா்களுடைய தலைமையில் நடைபெற்றதுடன் விருந்தினா்களாக திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் , மேலதிக அரச அதிபா் மாவட்டச் செயலகம் - மன்னார் அவா்களும், திரு. எம்.எம்.சியான் , வலயக் கல்விப் பணிப்பாளா் - மன்னார் அவா்களும் கலந்து சிறப்பித்தனா்.
இருநாட்களாக நடைபெற்ற போட்டிகளின் இறுதி நாளான இன்று காலை முதல் மைதான நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி நடைபெற்று மாலையில் மாணவா்களுக்குரிய வெற்றிக் கிண்ணங்கள் வழங்கலுடன் நிறைவுபெற்றது.
போட்டிகளின் புள்ளி விபரங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றதும் அறியத் தருவோம்.
போட்டிகளின் புள்ளி விபரங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றதும் அறியத் தருவோம்.
நானாட்டான் கோட்ட மட்ட விளையாட்டுக்கள் - 2013 (படங்கள் இணைப்பு)
Reviewed by மன்னார் மன்னன்
on
February 22, 2013
Rating:
No comments:
Post a Comment