மன்னார் பிரதான பாலத்தில் இருந்து கடலினுள் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தென்பகுதி யுவதி
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் கடற்படையினரால் மீட்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
இன்று மதியம் 12 மணியளவில் மன்னார் நீதிமன்றம் பிரதான வீதிக்கு முன்பாகவுள்ள மன்னார் பிரதான பாலத்தில் இளம் யுவதி ஒருவர் நடமாடித்திரிந்துள்ளார்.
-இந்த நிலையில் குறித்த யுவதி பிரதான பாலத்தில் இருந்து கடலினுள் திடீர் என குதித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பாலத்திற்கு அருகாமையில் பாதுகாப்புக்கடமையில் இருந்த பள்ளிமுனை கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் சம்பவத்தை கண்ட நிலையில் யுவதியைக்காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதோடு கடலினுள் அவர்கள் இருவரும் பாய்ந்து பலத்த சிரமங்களின் மத்தியில் குறித்த யுவதியை மீட்டு படகு ஒன்றின் உதவியுடன் யுவதியை கரைக்கு கொண்டு சென்றனர்.
நீரில் மூழ்கி மயக்கமடைந்த யுவதியினை நிலை கவலைக்கிடமான நிலையில் காணப்பட்ட நிலையில் உடன் மன்னார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
-குறித்த யுவதி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி மதவாச்சி பகுதியைச் சேர்ந்த பவசரா(வயது-20) –என மன்னார் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(மன்னார் நிருபர்
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து கடலினுள் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தென்பகுதி யுவதி
Reviewed by Admin
on
February 22, 2013
Rating:

No comments:
Post a Comment