அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மலேரியா காய்ச்சல் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புனர்வு கருத்தமர்வு.


2015 ஆம் ஆண்டுக்குள் மலேரியா அற்ற இலங்கையை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னார் சர்வோதைய அமைப்பு பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்திருந்த விழிப்புனர்வு கருத்தரங்கு நேற்று புதன் கிழமை மன்னார் அல்-அஸ்ஹர்.ம.வி பாடசாலை மற்றும் மன்-முருங்கன் ம.வி ஆகிய பாடசாலைகளில் இடம் பெற்றதாக மன்னார் சர்வோதைய அமைப்பின் இனைப்பாளர் எஸ்.யுகேந்திரன்  மன்னார் இணையத்திற்கு (Newmannar.com) தெரிவித்தார்.







-குறித்த இரண்டு பாடசாலைகளிலும் உயர் வகுப்பில் கல்வி கற்கும் சுமார் 250 மாணவர்கள் வரை பங்கு பற்றியுள்ளனர்.

-மலேரியா காய்ச்சல் பரவுவது குறித்தும் அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக  மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக கிராமப்புரங்களில் உள்ள மக்களுக்கு விழிர்ப்புனர்வு ஏற்படுத்தும் முகமாக குறித்த கருத்தரங்கு மாணவர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன் போது மலேரியா நுளம்பை அடையாளம் காணுதல்,குறித்த நோய் தொடர்பாக மக்களை எவ்வாறு விழிர்ப்புனர்வு  ஏற்படுத்துதல்,கிராமப்புர மக்களுக்கு எவ்வாறு விழிப்புனர்வை ஏற்படுத்துதல்  போன்ற விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அரவிந்தன்,சர்வோதைய திட்ட இணைப்பாளர் எஸ்.ரி.குமாரகே,சர்வோதைய அமைப்பின் ஜீ.எப்.ஏ.ரி.எம்.நிகழ்ச்சித்திட்ட இயக்குனர்  புத்திக்க கப்பாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

(மன்னார் நிருபர் வினோத் )
மன்னாரில் மலேரியா காய்ச்சல் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புனர்வு கருத்தமர்வு. Reviewed by NEWMANNAR on February 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.