மன்னார் எமில்நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டரங்கு இடமாற்ற முயற்சி.
மன்னார் நகரில் சர்வதேச தரத்திற்கு அமைக்கப்படவிருந்த நவீன வசதிகளுடனான விளையாட்டு அரங்கு சில அரசியல் தலையீடுகள் காரணமாக மன்னார்- தாராபுரம் பகுதியில் நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு மன்னார் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,,,,
மன்னார் நகரில் சகல வசதிகளையும் கொண்ட அதி நவீன விளையாட்டரங்கு ஒன்று இல்லாததை தொடர்ந்து பல தரப்பினரும் தொடர்ந்தும் விடுத்த தொடர்ச்சியான வேண்டுகொளையடுத்து மன்னார் நகரில் அதி நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டு அரங்கொன்று அமைப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலக பிரிவில் மன்னார் நகர சபைக்கு உற்பட்ட எமில்நகர் பகுதியில் குறித்த விளையாட்டு அரங்கிற்கு சுமார் 17 ஏக்கர் காணி அதிகாரிகளினால் ஒதுக்கப்பட்டது.
அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட மண்டபம் |
-மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதப்பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் குறித்த விளையாட்டு அரங்கினை எமிழ் நகர் பகுதியில் அமைப்பது தொடர்பில் இருதி தீர்மானமும் எடுக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
-இந்த நிலையில் எந்த வித நியாயமான காரணங்கள் எவையுமின்றி மன்னார் நகர் பகுதியான எமிழ் நகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட காணியில் குறித்த விளையாட்டு அரங்கு அமைக்காது சில அதிகாரமுள்ள அரசியல் வாதிகளினாலும்,ஒரு சில விளையாட்டுத்துரை அதிகாரிகளினாலும் குறித்த விளையாட்டு மைதானம் தாராபுரம் பகுதிக்கு மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது.
-மன்னார் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும்,வர்த்தக பட்டினமுமாக மன்னார் நகரே விளங்குகின்றது.மன்னார் நகரத்தின் குறித்த விளையாட்டு அரங்கு அமையப்பெற்றால் மாவட்ட ரீதியில் விளையாட்டுத்துறையில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் பெரும் பயனை அனுபவிப்பர்.
![]() |
எமில்நகர் பகுதியில் ஒதுக்கப்பட்ட காணி |
-ஏற்கனவே தாழ்வுபாடு-தாராபுரம் பிரதான வீதியில் மன்னார் ஆயரினால் வழங்கப்பட்ட காணியில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த நிலையில் தாராபுரம் பகுதிக்கு மேலும் ஒரு விளையாட்டரங்கு தேவையற்றது.
-மன்னார் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள விளையாட்டு அரங்கினை பிரிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி மாவட்ட ரீதியில் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் உற்பட அனைத்துத்தரப்பினரையும் விசனமடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விளையாட்டு அரங்கிளை முன்பு ஒதுக்கப்பட்ட மன்னார் எமிழ் நகர் பகுதியிலேயே அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும், உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் எமில்நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன வசதிகளையும் கொண்ட விளையாட்டரங்கு இடமாற்ற முயற்சி.
Reviewed by NEWMANNAR
on
February 07, 2013
Rating:

1 comment:
தொடரும் ரிசாட்டின் அட்டகாசம் ,,, தன்னுடைய ஊரான தாராபுரத்துக்கு மாற்ற இவனுக்கென்ன உரிமை இருக்கு ,,
"ஆடாதடா ஆடதடா ரிசாத் ரொம்ப ஆட்டம் போட்ட அடங்கிடுவாய் ரிசாத்,,,,"
Post a Comment