நானாட்டான் பிரதேசத்தில் சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றன
மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு தற்போது 3ஆம் கட்ட சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக நானாட்டான் பிரதேச செயலாளர் அகஸ்ரஸ் சந்திரையா தெரிவித்தார்.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 2,140 குடும்பங்கள் சமுர்த்திக் கொடுப்பனவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வலயம் 1 இல் 15 கிராம வேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் வலயம் 2 இல் 16 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுமே சமுர்த்திக் கொடுப்பனவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சமுர்த்திக் கொடுப்பனவானது குடும்ப உறுப்பினர்களின் தொகைக்கு அமைய வழங்கப்படுகின்றன. 1 தொடக்கம் 2 வரையான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 750 ரூபாவும் 3 தொடக்கம் 5 வரையான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 1,000 ரூபாவும் 6 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 1,500 ரூபாவும் மாதாந்தம் சமுர்த்திக் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றன.
சமுர்த்திக் கொடுப்பனவுக்காக சுமார் 2 மில்லியன் ரூபா நிதி ஒவ்வொரு மாதத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நானாட்டான் பிரதேச செயலாளர் அகஸ்ரஸ் சந்திரையா தெரிவித்தார்.
நானாட்டான் பிரதேசத்தில் சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றன
Reviewed by NEWMANNAR
on
March 18, 2013
Rating:

No comments:
Post a Comment