"அங்கே தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" பிக்கு மீது மீண்டும் தாக்குதல் -காணொளி
தமிழ்நாடு வந்த இலங்கை புத்த பிக்கு மீது தஞ்சாவூரிலும், திருச்சியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆன்மீக குழுவுடன் இன்று சென்னை மத்திய ரயில் நிலையம் வந்த புத்த பிக்குவை கடுமையாக சிலர் தாக்கியுள்ளனர்.
இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது.
இக்குழுவில் புத்த பிக்கு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். "அங்கே தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிக்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேவேளை தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிக்கு மீது தஞ்சாவூரிலும், திருச்சியிலும் வைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"அங்கே தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" பிக்கு மீது மீண்டும் தாக்குதல் -காணொளி
Reviewed by NEWMANNAR
on
March 18, 2013
Rating:

No comments:
Post a Comment