மன்னாருக்கு ஜப்பான் 8.2 மில்லியன் ரூபா உதவி
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதியுதவியளித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புடன் கூடிய வருமான மீட்டும் செயற்றிட்டத்திற்காக ஜப்பானிய அரசாங்கம் சுமார் 8.2 மில்லியன் ரூபாவை நன்கொடை உதவியாக வழங்கியுள்ளது.
அடிமட்ட மனித பாதுகாப்புக்கான நன்கொடை திட்டத்தின் கீழ் இந்நிதியை ஜப்பான் அரசாங்கம் வழங்கியிருக்கின்றது.
‘மன்னாரில் நன்னீர் வளத்தை மேம்படுத்தும் செயற்றிட்ட திட்டமானது’ பத்து களி மண் தடாகங்கள் உள்ளடங்கிய மீன் இன விருத்தி நிலையம்இ வண்டல் தடாகம்இ தண்ணீர் வழங்குவற்கும் அகற்றுவதற்குமான கால்வாய்கள்இ ஓரு சேவை வழங்கல் கட்டிடம் அமைக்கவும் நீரியல் வளம் மறறும் நன்னீர் மீன் பிடித்தலுக்கு தேவையான பயிற்சி வழங்குவதற்கு அவசியமான உபகரணங்கள் வழங்கவும் உதவும்.
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் அமுல்படுத்தப்படும் இந்த செயற்றிட்டதின் மூலம் மன்னார் மாவட்டத்தின் சிரிக்குளம் கிராமத்தில் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின்; உணவு பாதுகாப்பையும் மற்றும் வருமான மீட்டலலையும் அதிகரிக்க பங்களிப்புச் செய்யப்படும்.
இந்த சிறிய மீன் இன விருத்தி நிலையம் வருடமொன்றிற்கு 2 மில்லியன் மீன் குஞ்சுகளை உறபத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் மன்னார் மாவட்டத்திலுள்ள கட்டுக்கரைக் குளத்திலும் மற்றைய குளங்களிலும் விடப்படும்.
இச்செயற்றிட்டத்தின் மூலம் 108 மீனவ சங்கங்களின் உறுப்பினர்கள் நேரடியாக பயனடைவதுடன் மன்னார் மாவட்டத்திலுள்ள 70,000 மீனவர்கள் மறைமுகமாகவும் பயனடைவர். இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ மற்றும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நிமல் சந்திரரத்ன ஆகியோர் இந்நன்கொடை தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆலோசகரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மன்னாருக்கு ஜப்பான் 8.2 மில்லியன் ரூபா உதவி
Reviewed by Admin
on
March 08, 2013
Rating:
Reviewed by Admin
on
March 08, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment