மகா சிவராத்திரியை முன்னிட்டு 11ஆம் திகதி இந்து பாடசாலைகளுக்கு விடுமுறை
மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல இந்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் மிக முக்கியமான விரமதமான மகா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் 11ஆம் திகதி அதிகாலை வரை நடைபெறவுள்ளதால் இந்து மாணவர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை வழங்குமாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலங்கையிலுள்ள அனைத்து இந்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கு பதிலாக எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையை நடத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு மாகாண கல்வி செயலாளர்களுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளருக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு 11ஆம் திகதி இந்து பாடசாலைகளுக்கு விடுமுறை
Reviewed by Admin
on
March 08, 2013
Rating:
Reviewed by Admin
on
March 08, 2013
Rating:


No comments:
Post a Comment