அண்மைய செய்திகள்

recent
-

எமது உறவை மீட்கும் வரை அதற்கான போராட்டம் தொடர வேண்டும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் உரை


காணமற்போன எமது உறவுகளை மீட்கும் வரை எமது இந்தப் போராட்டம்  தொடர வேண்டும். அரசு உரிய பதிலைத் தரும்வரை தொடர்ந்து போராட வேண்டும். ஒன்று திரண்டு சர்வதேசம் வரை செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விநோ நோகராதலிங்கம் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.


நேற்றைய நாள் வவுனியாவில் இடம்பெற்ற, காணாமற்போன, கைது செய்யப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தரக்கோரி வடக்கு கிழக்கு உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இவ்வாறு அழைப்பு விடுத்தனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய விநோ நோகராதலிங்கம்,
இன்று எங்கள் உறவுகளை இழந்த நிலையில் இந்த அரசிடடம் நீதி கோரி இந்தப் போராட்டத்ததை நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசு எமக்கு உரிய பதிலைத் தர வேண்டும். தொடர்ந்தும் அரசு ஏமாற்ற முடியாது. இது ஜெனிவா வரை சென்றுள்ளது.

எமது உறவை மீட்கும் போராட்டம் தொடர வேண்டும். எமது பிள்ளைகளை மீட்டுத் தரும் வரை தொடர வேண்டும். தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். உண்மையில் மகிழ்ச்சி. எல்லலோரும் ஒன்றாகத் திரண்டு சர்வதேசம் எங்கும் சொல்ல வேண்டும்.

உலக நாடுகளுக்கு, ஐ.நா சபை, மனிதவுரிமைப் பேரவைக்கு நடுங்கும் அரசு உங்கள் குரலுக்கும் உங்கள் உணர்வுகளுக்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.  

ரோடு கேட்கவில்லை. வீடு கட்டித் தாருங்கள் என்று கேட்கவில்லை. உங்களிடம் ஒப்படைத்த உறவுகளைத்தான் தாருங்கள் என்று கேட்கின்றோம். நிச்சயமாக இதற்கான பதில் அரசிடம் இருந்துதான் வர வேண்டும். 

ஜனநாயக ஆட்சி என்று கூறும் இந்த நாட்டில் ஜனநாயகத்துடன் போராடுவதற்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. நேற்று நாம் பட்ட கஸ்டம் மறந்து உறவுகளை மீட்க போராடுவது மகிழ்ச்சி.

உங்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு த.தே.கூட்டமைப்பினர் இங்கும் ஜெனிவாவிலும் சிறையில் வாடும் உறவுகளுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். தொடர்ந்தும் கொடுப்போம். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்மூலம் நிச்சயமாக உறவுகளுக்கான பதிலை அரசு தர வேண்டும். என்றார்.


இப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சிவசக்தி ஆனந்தன், 
எந்த அடிப்படை சுதந்திரமும் இல்லாத ஒரு மண்ணில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஐ.நா சபையில் மனிதவுரிமை விடயம் நடந்தாலும் கூட இந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை முழுவதும் படுகொலை காணாமல் போயுள்ளனர். இது ஐ.நாவில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும். 

வடக்கில்  ஆயிரக்கணக்கான உறவுகள் தொலைக்கப்பட்டுள்ளன. பல பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதா இல்லையா என்றும் கழுத்தில் தாலி போடுவதா இல்லையா என்ற நிலையிலும் வாழ்கின்றனர்.

இந்த அமர்வில் காணாமல் போனோர் தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உதவிய சர்வதேசம் காணாமல்போனவர்களுக்கு 
பதில் சொல்லியே ஆகவேண்டிய தேவை உள்ளது. 

யுத்தம் முடிந்து 4 வருடம் ஆகியும் சிறையிலுள்ளவர்கள் தொடர்பில் வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும்.

பாதுகாப்புச் செயலர் முழுப் பூசனிக்காயை சோற்றில் புதைப்பது போன்று இறுதிக்கட்ட யத்தத்தில் யாரையும் கைது செய்யவில்லை, சரணடைந்தோர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினாலும், இன்றைய இந்தப் போராட்டம்உண்மையை உலகிற்கு கூறும். சர்வதேசத்தின் கண்ணைத் திறக்கும். 

இதை இத்துடன் நிறுத்திக் கொள்ளாது ஓயக் கூடாது. முன்னெடுக்க வேண்டும். அத்துடன் சிறையில் வைத்திருப்பவர்களது பிரச்சினைகளை நிறுத்தாது அரசு உண்மையை சொல்லாத வரைக்கும் தொடர்ச்சியாக இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்க வேண்டும். என்றார்.
எமது உறவை மீட்கும் வரை அதற்கான போராட்டம் தொடர வேண்டும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் உரை Reviewed by Admin on March 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.