பாராபட்சம் இன்றி சம உரிமைகளுடன் நாங்களும் வாழ வேண்டும் சர்வதேசத்திடம் கோருகிறார்; செபமாலை அடிகளார்
காணாமல் போன தமது உறவுகள் தொடர்பில் பதிலளிக்குமாறு கோரி வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் நடைபெற்று நான்கு வருடங்கள் ஆகியும் எமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுத்தரப்படவில்லை. யுத்தம் நடைபெறும் போது மௌனிகளாக இருந்த சர்வதேசம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்கள் விட்ட பிழைகளை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டன.எனவே இன்னும் ஒரு மன்னிப்பினை அவர்கள் எங்களிடம் கேட்காது பாராபட்சமற்ற தீர்வு ஒன்றினை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
அத்துடன் யாரும் காணாமல் போகவில்லை என்று ஆட்சியில் உள்ள அரசு கூறிவருகின்றமை அப்பட்டமான பொய். ஏனென்றால் உறவுகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளும் வலுக்கட்டாயமான வீட்டிற்கு வந்து பிடித்துச் சென்றவர்களுமே காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள். சாட்சிகள் இல்லை என்று கூறி யாரும் கண்ணை மூடி இருந்து விட முடியாது. எமது உறவுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அனைவருடைய கட்டாயமும் ஆகும்.
மேலும் 30 வருடங்களுக்கு மேலாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டுள்ளன. இன்று வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுடைய நிலங்கள் இராணுவத்திரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதுமட்டும் அல்ல பல்வேறு பிரிவுகளாலும் மக்கள் அச்சுறுத்தப்பட்டு எந்தவிதமான அடிப்படை சுதந்திரமும் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து சம உரிமைகளுடன் தமிழர்களும் வாழ்வதற்கு சர்வதேசம் முனைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் சர்வதேசத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராபட்சம் இன்றி சம உரிமைகளுடன் நாங்களும் வாழ வேண்டும் சர்வதேசத்திடம் கோருகிறார்; செபமாலை அடிகளார்
Reviewed by Admin
on
March 08, 2013
Rating:
No comments:
Post a Comment