ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றம்! இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு
.jpg)
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
இதன்படி 12 மேலதிக வாக்குகளினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
25 வாக்குகளைப் பெற்று அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக அமெரிக்க தீர்மானம் குறித்து பேசிய இலங்கை தூதர், அமெரிக்க தீர்மானம் எற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.
இந்தியா இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக வாக்களித்தது.
இந்தியா, அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, மான்டிநெக்ரா, எஸ்டோனியா, செக்குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலாந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
பாகிஸ்தான்,கியூபா, ஈகுவேடார், வெனிசுலா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா, கட்டார், காங்கோ, மாலைதீவு, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து, மவுரிடானியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றம்! இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு
Reviewed by Admin
on
March 21, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment