அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு,கிழக்கில் காணி அபிவிருத்தி அமைச்சின் இணைக் காரியாலயங்கள்


வடக்கு,கிழக்கில் காணி அபிவிருத்தி அமைச்சின் இணைக் காரியாலயங்கள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் காணி, மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் இணைக்காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இக்காரியாலயங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன், அமைச்சின் பிரதி அமைச்சர் சிரிபால கமலத் ஆகியோரினால் அன்மையில் திறந்துவைக்கப்பட்டன.

இணைக்காரியாலய அதிகாரிகளாக ஓய்வு பெற்ற நிர்வாகசேவை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உதவியாக புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இவ் அதிகாரிகள் யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகானும் முகமாக 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கிடையில் நடவடிக்கை எடுப்பர்.
வடக்கு,கிழக்கில் காணி அபிவிருத்தி அமைச்சின் இணைக் காரியாலயங்கள் Reviewed by Admin on April 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.