அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயன்படுத்தி கடல் மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்தனர்.(படங்கள் )

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயன்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முதலாக  இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர். 

சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குறித்த நான்கு பேரும் இந்தியாவிங்குச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தியா தனுஸ்கோடி கடற்கரையில் இருந்து ''கைட் போட்'' யை பயண்படுத்தி தலைமன்னாரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர்.


-இவர்களுடைய கடல் மார்க்கமான பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியை வழங்கி இருந்தது.

-மதியம் 12.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.இவர்கள் தலைமன்னாருக்கு வருவதற்கான  சகல ஏற்பாடுகளையும் எழிமன்ஸ் அமைப்பின் முகாமையாளர் ஜெரோம் பெணாண்டஸ் மேற்கொண்டிருந்தார்.

-இவர்களுடைய வருகையை பதிவு செய்ய மற்று விசாரனைகளுக்காக  குடிவரவு,குடியகழ்வு திணைக்கள அதிகாரி எஸ்.யசோதன்,சுங்கத்திணைக்கள அதிகாரிகளான என்.எஸ்.குமார நாயக்க,என்.வீரசிங்க ஆகியோர் தலைமன்னார் கடற்கரைக்குச்  சமூகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர்)









(28-05-2013)
சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயன்படுத்தி கடல் மார்க்கமாக தலைமன்னாரை வந்தடைந்தனர்.(படங்கள் ) Reviewed by NEWMANNAR on May 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.