அண்மைய செய்திகள்

recent
-

காடுகளாகும் முசலி பஸ் தரிப்பிடம்


 மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை சந்தியில் இருந்து புத்தளம்.இலவங்குளம் செல்லும் பிரதான பாதையில் அமைக்கப்பட்ட பயணிகள் பஸ் தரிப்பிடத்தின் அவல நிலையினை பார்த்து முசலி மக்கள் கவலை அடைகின்றனர்.

 மரிச்சிகட்டி மற்றும் மரைக்கார் தீவு மீள்குடியேற்ற கிராம சந்தியில் அமைக்கபட்ட தரிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் பாம்புகள் மிருங்கள் தங்களின் உறைவிடமாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

  முசலி பிரதேச சபை கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி கொண்டு வருகின்றது இன்னும் அதிகமான சந்திகளில் தரிப்பிடம் இல்லாமல் பொது மக்கள் மழையிலும் வெயிலும் கஸ்டப்படுகின்றனர் முசலி மக்களின் வாக்குகளை கொள்ளை கொண்ட பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் ஏ.ஜெசில் கூட மக்களின் நலன் முன்னேற்றம் குறித்து சபையில் பேசுவதில்லை என வாக்களித்த மக்கள் கவலை அடைகின்றனர் மக்களின் நலன் விடயத்தில் அதிகாரிகள் அரசியல்வாதி கவனம் செலுத்தப்பட வேண்டும் என மக்கள் வேண்டிகொள்கின்றனர்.






எஸ்.எச்.எம்.வாஜித் 27.5.2013
காடுகளாகும் முசலி பஸ் தரிப்பிடம் Reviewed by Admin on May 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.