பெரியதம்பனை வீதி திருத்தப்படாமையால் மக்கள் அவதி
பிரமாணலங்குளத்தில் இருந்து மடுவுக்கு செல்லும் 20 கிலோமீற்றர் நீளமான இப் பிரதான வீதியில் மடு, பாலம்பிட்டி, தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், கீரிசுட்டான், சின்ன பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான், பெரியதம்பனை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்து செய்கின்றனர்.
இப் பகுதி மக்கள் மீள்குடியேறி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னும் இவ் வீதி புனரமைக்கப்படாமையினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் இம்மக்கள் வீதி சீரின்மையால் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மழைக் காலத்தில் முகம்கொடுத்துவருவதுடன் வைத்தியசாலை வசதிகள் இப் பகுதியில் இன்மையால் நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப் பகுதியியல் அமைந்துள்ள மயானத்திற்கு செல்லும் வீதி பல இலட்சம் ரூபா பெறுமதியில் புணரமைக்கப்பட்ட போதிலும் அவ் வீதி கவனிப்பாரற்று காணப்படுவதுடன் இப் பகுதி கிராமங்களில் உள்ள உள்ளக வீதிகளும் செப்பனிடப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இவ் வீதயை மிக விரைவில் புணரமைப்பதற்கு ஆவண செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பெரியதம்பனை வீதி திருத்தப்படாமையால் மக்கள் அவதி
Reviewed by Admin
on
May 27, 2013
Rating:
No comments:
Post a Comment