அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து முல்லைத்தீவுக்கு நாளை முதல் தனியார் போக்குவத்து ஆரம்பம்

மன்னாரில் இருந்து முல்லைத்தீவுக்கான தனியார் போக்குவரத்துச் சேவை ஒன்று நாளை திங்கட்கிழமை முதல் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச்சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஸ் தெரிவித்தார்.


 பரந்தன் ஊடான பாதை மூடப்பட்டிருந்ததன் காரணத்தினாலும் பாதை சீர்கேடுகளின் காராணமாகவும் சேவையினை மேற்கொள்ள முடியாத நிலை நீண்ட காலங்களாக ஏற்பட்டிருந்தது. எனினும் மக்களின் நலனையும்,அவர்கள் தொடர்ந்தும் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு மன்னார் தனியார் போக்கு வரத்துச்சங்கம் நாளை திங்கட்கிழமை முதல் குறித்த புதிய சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

 நாளை திங்கட்கிழமை முதல் மன்னார் தனியார் போரூந்து தரிப்பிடத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி புறப்படும் குறித்த பஸ் முழங்காவில்,பூனகரி,பரந்தன்,கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவை சென்றடையும். மீண்டும் முல்லைத்திவில் இருந்து மதியம் 1.45 மணிக்கு குறித்த பேரூந்து குறித்த பாதைகளினுடாக மன்னாரை வந்தடையும்.

 குறித்த சேவை மீனவர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் உற்பட அனைவரினதும் நலன் கருதியும் உரிய நேரத்துடன் பயணங்களை தொடர்வதற்காகவும் குறித்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச்சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஸ் மேலும் தெரிவித்தார். இதே வேளை குறித்த பாதைகளினுடாக எவ்வித அரச போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து முல்லைத்தீவுக்கு நாளை முதல் தனியார் போக்குவத்து ஆரம்பம் Reviewed by Admin on May 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.