முச்சக்கர வண்டி சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவை மேற்கொள்ளுமாறு கோரிக்கை.
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் ஒதுக்கப்பட்ட காணியில் தற்போது மன்னார் முச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைந்துள்ளது. இதன் தலைவராக தெரிவு செய்யப்படுள்ளவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றார்.புதிய நிர்வாகத்தெரிவுளை நடாத்த அவர் அனுமதி வழங்காத நிலையில் அவருடன் சேர்ந்துள்ள சிலர் ஏனைய முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுடன் வண்முறையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தேவையற்ற காரணங்களுக்காக தலைவரும் அவருடன் சேர்ந்துள்ள சில முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் தரிப்பிடத்தில் வைத்து பொதுமக்கள் பார்க்கக்கூடிய வகையில் ஏனைய முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முச்சக்கர வண்டி சங்கத்தின் தற்போதைய தலைவராக செயற்பட்டு வருபவர் தனக்கு வேண்டி புதிய முச்சக்கர வண்டி ஓட்டுனர்களை எவ்வித ஆவணங்களும் இன்றி சங்கத்தில் இணைத்து சேவையில் ஈடுபடுத்துவதாகவும் இதனால் ஏனையோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இடையில் பிரிவினைவாதங்களை ஏற்படுத்தும் வகையில் மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவில் உள்ள,பதிவில் இல்லாத சில முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே உடனடியாக மன்னார் முச்சக்கர வண்டியின் நிர்வாகத்தை களைத்து உடனடியாக புதிய நிர்வாகத்தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்தும் தற்போதுள்ள தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டு வருவதினால் பல முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் எவ்வித வருமானமும் இன்றி பாதீப்படைந்து வருவதாகவும் இவ்விடையங்களில் மன்னார் நகர சபையும்,மன்னார் பொலிஸாரும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முச்சக்கர வண்டி சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவை மேற்கொள்ளுமாறு கோரிக்கை.
Reviewed by Admin
on
May 05, 2013
Rating:

No comments:
Post a Comment