அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றோர் விபரம் வெளியீடு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நேற்று நடாத்தப்பட்ட இளைஞர் பாராளுமன்றத்தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் வெளியிட்டுள்ளார்.


 மன்னார் மாவட்டத்தின் 4 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இந்த தேர்தல் நடாத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் இருவர் போட்டியிட்டுள்ளனர்.

இதன் போது மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி திரி ரோசஸ் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த செல்வராஜா சுகேந்திரன் அதிகூடிய வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இருவர் போட்டியிட்டுள்ளனர்.இதன் போது வங்காலை பஸ்ரியன் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த அருள் காந்தி அமல்ராஜ் குரூஸ் அதிகூடிய வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் இருவர் போட்டியிட்டுள்ளனர்.இதன் போது ஹமீடியா இளைஞர் கழகத்தைச் சேர்ந்த யூனைட் முஹமட் ஜரித் என்பவர் அதிகூடிய வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 பேர் போட்டியிட்டுள்ளனர்.இதன் போது மாந்தை மேற்கு சுடரொளி இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஏ.எம்.தேஸ்மன் அதிகூடிய வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் எஸ்.கே.றொலைக்ஸன் குரூஸ் என்பவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

 முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் நேற்று சனிக்கிழமை தேர்தல் வன்முறை இடம் பெற்றதாகவும்,தேர்தல் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது இரு வேட்பாளர்களுடைய ஆதரவாளர்களுக்கும் இடையில் கடும் சண்டை இடம் பெற்றதாகவும் இருதியில் சிலாபத்துரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உற்பட பொலிஸார் விரைந்து சென்று பிரச்சினையை தீர்த்து வைத்ததாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றோர் விபரம் வெளியீடு Reviewed by Admin on May 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.