அண்மைய செய்திகள்

recent
-

ஜயலத் ஜயவர்தன காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான  ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார்.

சிங்கப்பூர் மருத்துவ மனையில் இன்று காலை ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.  


இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜயலத் ஜயவர்தன அண்மையில் மாரடைப்புக் காரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்தவர். எனினும் சத்திரசிகிச்சை ஒன்றிற்காக சிங்கப்பூர் சென்றிருந்த இவருக்கு அங்கு சத்திரசிகிச்சை ஒன்றும்  மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான ஜயலத் ஜயவர்தன கட்சியின் மிக முக்கியமான பல  பதவிகளையும், அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்து வந்தார் . அத்துடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் நலன் தொடர்பிலும் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். 

1953ஆம் ஆண்டில் பிறந்த ஜயலத் ஜெயவர்தன இறக்கும் போது 60 வயதாகும்.  அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜயலத் ஜயவர்தன காலமானார் Reviewed by NEWMANNAR on May 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.