அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கோந்தைப்பிட்டியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவம் தற்காலிகமாக மூடு.

மன்னார் கோந்தைப்பிட்டியில் மாடு அறுக்கும் தொழுவம் சுத்தம் இல்லாததன் காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஞானசீலன் குனசீலன் தெரிவித்தார்.


மன்னார் நகர் பகுதியில் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுகின்ற சகல கடைகளும் மாடுகளை கோந்தைப்பிட்டியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் வைத்தே நீண்டகாலமாக மாடுகளை அறுத்து வந்தனர்.

குறித்த மாடு அறுக்கும் தொழுவத்தல் வெட்டப்படுகின்ற மாடுகளின் இரத்தம் குறித்த பகுதியில் தேங்கி நிற்பதன் காரணத்திகால் அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் வீசுவதோடு கோந்தைப்பிட்டி கடற்கரையில் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் எழுத்துமூலம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு மன்னார் நகர சபைக்கும் குறித்த பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(14-06-2013) கோந்தைப்பிட்டியில் அமைந்துள்ள மாடு அறுக்கும தொழுவத்தை சென்று பார்வையிட்டேன்.

இதன் போது அறுக்கப்படுகின்ற மாடுகளின் இரத்தம் தேங்கி நிற்காத வகையில் அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை.

மாட்டு இரத்தம் அருகில் உள்ள கடலுக்குச் செல்லும் வகையில் வடிகாண்களை அமைக்கவில்லை.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த தொழுவத்தில் தற்காலிகமாக மாடு அறுப்பதற்கான அனுமதியை நாங்கள் மறுத்துள்ளொம்.

குறித்த தொழுவம் மீள் திருத்தம் செய்யப்பட்டு மாட்டு இரத்தம் கடலுக்குச செல்லும் வகையில் உடனடியாக வடிகானை அமைக்குமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளொம்.

குறித்த திருத்தங்களை மேற்கொண்டதன் பின் மீண்டும் மாடு அறுப்பதற்கான  அனுமதி வழங்கப்படும் என மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஞானசீலன் குனசீலன் மேலும் தெரிவித்தார்.


 மன்னார் நிருபர்

17-06-2013)
மன்னார் கோந்தைப்பிட்டியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவம் தற்காலிகமாக மூடு. Reviewed by NEWMANNAR on June 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.