அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்கள் 8 பேரையும் ஜுன் 27 வரை சிறையிலடைக்க மன்னார் நீதிபதி உத்தரவு!

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஜூன் 27 வரை சிறையிலடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேசுவரத்தைச் சேர்ந்த குணபால், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சர்புதீன் ஆகிய இருவருக்கும் சொந்தமான விசைப்படகுகளில் 8 மீனவர்கள் கச்சத்தீவு அருகே சனிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.



அப்போது, இலங்கை கடற்படையினர் இவர்கள் 8 பேரையும் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரித்தனர்.இவர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி கனகராஜ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். 8 பேரையும் ஜூன் 27-வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கெனவே இம்மாதம் 5-ஆம் தேதி 4 படகுகளில் சென்ற 24 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுஅனுராதபுரம் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களைத் தவிர 6-ஆம் திகதி 5 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 24 மீனவர்களை இம்மாதம் 20-ஆம் திகதியும், மறுநாள் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இம்மாதம் 19-ஆம் திகதியும் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டு, இம்மாதம் 27-ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 8 பேரையும் ஜுன் 27 வரை சிறையிலடைக்க மன்னார் நீதிபதி உத்தரவு! Reviewed by NEWMANNAR on June 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.