உலக சுற்றாடல் தினத்தையோட்டி முருங்கன் வைத்தியசாலையில் பல்வேறு நிகழ்வுகள்.
உலக சுற்றாடல் வாரத்தினையொட்டி சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு செயலாளர் அவர்களின் சுற்று நிரூபத்தின் கீழ் நாடு பூராகவும் கடந்த 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை சுற்றாடல் வாரத்தினை பிரகடனப்படுத்துமாறு பணிக்கப்பட்டதையிட்டு, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வேண்டுகோளிற்கு அமைய முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. ஒஸ்மன் சாள்ஸ் மற்றும் வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் முருங்கன் வைத்தியசாலையில் உள்ள உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் உலக சுற்றாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் நிகழ்வாக முருங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் வைத்திய அதிகாரிகளினால் உலக சுற்றாடல் தினம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்வாக முருங்கன் வைத்தியசாலையின் சுற்றுப்புற சூழலில் நீர் தேங்கிக் காணப்படும் ,டெங்கு நுளம்பு பரவும் இடங்களை நிரப்பியும், தற்காலிக வடிகால் அமைப்பும் வைத்தியசாலை அபிவிருத்திச் சபையும், அயல் கிராமங்களில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், போன்றனவும இணைந்து மேற்கொண்டனர்.
மூன்றாம்; நாள் நிகழ்வாக வைத்தியசாலை வளாகத்தினுள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் காணப்பட்ட சிறுவர் பூங்கர் வைத்தியசாலை அபிவிருத்திச் சபை, மற்றும் பொது மக்களின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டது
நான்காம்; நாள் நிகழ்வாக உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வைத்திய அதிகாரியினால் சூழல், சுகாதாரம் தொடர்பான கருத்துக்கள் வெளி நோயாளர் பிரிவுக்கு வந்த மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஐந்தாம் நாள் நிகழ்வாக முருங்கன் வைத்தியசாலையின் வளாகத்தினுள் பயன்தரும் , அழகுதரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஆறாம்; நாள் நிகழ்வாக உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு தயாரித்தல் , வீண்விரயம் தொடர்பான சுகாதார கருத்துக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஏழாம் நாள் நிகழ்வாக முருங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் வைத்தியசாலை வளாகமும், துப்பரவு செய்யப்பட்டதாக முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. ஒஸ்மன் சாள்ஸ் மேலும் தெரிவித்தார்.
( மன்னார் நிருபர்)
(17-06-2013)
உலக சுற்றாடல் தினத்தையோட்டி முருங்கன் வைத்தியசாலையில் பல்வேறு நிகழ்வுகள்.
Reviewed by NEWMANNAR
on
June 17, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 17, 2013
Rating:

No comments:
Post a Comment