சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.

-நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாத நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வீடுகளில் முடிங்கி உள்ளனர்.
இதனால் குறித்த மீனவர்களின் நாளாந்த தேவைகள்,பிள்ளைகளின் கல்வி,உணவு,மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முடியாத நிலையில் உள்ளனர்.
எமது சமாசத்தில் பதிவில் உள்ள 32 மீனவர் கூட்டுறவுச்சங்கங்களில் ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களில் முப்பத்தையாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.
எனவே இவர்களுக்கான நிவாரண உதவிகளை கடல் தொழில் அமைச்சினுடாக பெற்று வழங்கி உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் நிருபர்-
(17-06-2013)
சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
June 17, 2013
Rating:

No comments:
Post a Comment