அண்மைய செய்திகள்

recent
-

சிலாபத்துறை மக்கள் இடை மறிக்கப்பட்டமையினை வன்மையாக கண்டிக்கின்றோம்- முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று(26-06-2013) புதன் கிழமை முசலி பிரதேச சபை தலைவருக்கு மகஜர் கையளிக்கச் சென்ற போது     குறித்த மக்களில் பலரை கிராம மட்ட தலைவர்கள் வழி மறித்து மீண்டும் வீட்டுக்கு அனுப்பிய சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று ஊடக அறிக்கை ஒன்றை
 வெளியிட்டுள்ளார்.அதில் குறிப்பிடுகையில்,,,,

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கிராமத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இது வரை ஏற்படுத்திக் கொடுக்காத நிலையில் குறித்த மக்கள் முசலி பிரதேச சபையின் தலைவருக்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளிக்க முடிவு செய்தனர்.

நேற்று(26-06-2013) புதன் கிழமை பல பாகங்களிலும் உள்ள சிலாபத்துரை மக்கள் முசலி பிரதேச சபையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

முசலி பிரதேச சபைக்கு செல்வதற்காக வந்த வேளை அனைத்தமக்களும் முசலி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் சிலாவத்துறை சந்தி பகுதியிலும் வைத்து கிராம மட்ட தலைவர்கள்  என கூறப்படுபவர்களினால் இடை மறிக்கப்பட்டு அவர்களிடம் நீங்கள் எங்கே போகின்றீர்கள்?    அமைச்சர் றிசாட் பதீயுதின் அவர்களுக்கு எதிராகவும் பிரதேச சபை தவிசாளர் அவர்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறி குறித்த மக்களை இடைமறித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிலாவத்துறை மக்கள் தங்கள் பிரச்சினைகளை பிரதேச சபை தவிசாளரிடம் சென்று கூறுவதற்காக சென்ற போது அந்த மக்களின் உரிமையினை பறித்துள்ளனர்.
இச் செயலானது வெந்த புண்ணில் வேல் பாச்சும் செயலாக காணப்படுகின்றது.

அமைப்புக்களில் தொண்டு பணியாற்றும் தலைவர்கள் அரசியலுக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான வித்தியாசத்தினை நன்கு அறிந்து  கொள்ள வேண்டும்.

அரசியல் வாதிகள் என்பது மக்களினால் வாக்களிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை ஆற்றுபவர்கள்.

அபிவிருத்தி என்பது பாதிக்கப்பட்ட மக்கள் எங்கே இருக்கின்றார்களோ அங்கே சென்று மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் இதனை முற்று முழுதாக விளங்கி கொண்டால் தான் எல்லாமக்களும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும்.

 மக்கள் எங்களுடைய பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுக்கு சொல்லுவதற்கு அதிகாரம் இல்லையா? எனவும் கேல்வி எழுப்பியுள்ளனர்.
இவ்வாறான சில தலைவர்களினால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பாடல் துண்டிக்கப்படுவதுடன் உரிமைகளும் மறுக்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாட்டை முசலி பிரதேச பிரஜைகள் குழு வன்மையாக கண்டிப்பதோடு இனி வருகின்ற காலங்களில் இவ்வாறானதொரு செயற்பாடுகள் எமது முசலிபிரதேசத்தில் நடைபெற கூடாது எனவும் இவ்வாறானதொரு செயற்பாடுகளில் மக்கள் விளிப்புடன் உங்களுடைய உரிமைகளை பெறுவதற்கும் அதிகாரிகளிடம் குழுவாக சென்று உங்களுடைய பிரச்சினைகளை கூறமுடியும் எனவும் அபிவிருத்திதிட்டம் சார்ந்தவிடயங்களில் அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு உங்களுடைய பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவ்வாறு உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் முசலி பிரதேச பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் இதற்கான சரியான தீர்வினைபெற்றுத்தர முடியும் எனவும் முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் ஏ.சுனேஸ் சோசை தெரிவித்துள்ளார்.


சிலாபத்துறை மக்கள் இடை மறிக்கப்பட்டமையினை வன்மையாக கண்டிக்கின்றோம்- முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை Reviewed by Admin on June 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.