இன்று மீண்டும் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளது தென்னாபிரிக்க தூதுக்குழு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்திருந்த தென்னாபிரிக்க குழுவினர் நேற்று முன்தினம் காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து நேற்று காலை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான அரசாங்க தூதுக்குழுவினரையும் தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரசாங்கத் தரப்புடனான பேச்சுக்களை அடுத்து இன்று மீண்டும் கூட்டமைப்பினரை இந்தக் குழுவினர் சந்திக்கின்றனர்.
நேற்று முன்தினம் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டன. இருந்த போதிலும் இலங்கையின் தற்போதைய சூழல் சமரசத்திற்கோ, இணக்கப்பாட்டிற்கோ ஏதுவாக அமையவில்லை. இதனால் இருதரப்பிற்குமிடையில் இணக்கத்தை ஏற்படுத்த தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தென்னாபிரிக்கத் தூதுக்குழு தெரிவித்திருந்தது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான அரசாங்க தூதுக்குழுவுடனான சந்திப்பின் போது பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தென்னாபிரிக்கக் குழு கேட்டறிந்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பினருக்கு அறிவிப்பதற்காகவே இன்றைய சந்திப்பு இடம் பெறவுள்ளதாக தெரிகின்றது.
இன்று மீண்டும் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளது தென்னாபிரிக்க தூதுக்குழு
Reviewed by Admin
on
June 26, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment