வட மாகாண சபைத் தேர்தலுக்கு ஆசியக் கண்காணிப்பாளர்கள் : பெவ்ரல் ஏற்பாடு
10 ஆசிய கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பெவ்ரல் அமைப்பின் சுமார் 1000 கண்காணிப்பாளர்கள் வட மாகாண சபைத் தேர்தலில் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2012 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களுக்கு இரண்டு வாரங்களில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்க நடமாடும் சேவைகைளை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெவ்ரல் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து விபரிக்கையிலேயே இந்த தகவல்களை வெளியிட்டார்.
வட மாகாண சபைத் தேர்தலில் ஆசிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சுயாதீனமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பு என்ற அமைப்பின் ஊடாகவே இதனை மேற்கொள்ளவுள்ளோம்.
அந்த வகையில் தாய்லாந்து பங்களாதேஷ் நேபாளம் ஜப்பான் மற்றும் பிலிப்பின், இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் கண்காணிப்பு பிரதிநிதிகளை வடக்குத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளோம்.
அடுத்தகட்டமாக எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து எட்டு நாட்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடமாடும் சேவைகளை நடத்தவுள்ளோம். இதன்போது முத்திரை மற்றும் புகைப்படங்களுக்கான செலவை பெவ்ரல் அமைப்பு ஏற்கின்றது. நடமாடும் சேவையின்போது ஆரம்ப விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து ஆட்பதிவு திணைக்களத்தின் அதிகாரிகளிடம் வழங்குவோம். அதன் பின்னர் இரண்டு வாரங்களில் உரியவர்களுக்கு அடையாள அட்டை கிடைத்துவிடும். இந்த விடயத்தில் ஆட்பதிவு திணைக்களத்தினதும் அதன் ஆணையாளரினதும் சேவையும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானதாகும் என்றார்.
வட மாகாண சபைத் தேர்தலுக்கு ஆசியக் கண்காணிப்பாளர்கள் : பெவ்ரல் ஏற்பாடு
Reviewed by Admin
on
June 26, 2013
Rating:

No comments:
Post a Comment