அண்மைய செய்திகள்

recent
-

யாழ். கந்தரோடையில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அம்மிக் கல் கண்டுபிடிப்பு

யாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் இருந்து சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் அந்த இடத்துக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் கந்­த­ரோடைப் பகு­தியில் மேற்­கொண்ட அகழ்­வா­ராய்­சியின் போது இந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.


அதனையடுத்து இப்பொருட்கள் எக்காலத்துக்குரியவை என்பதை கண்டுபிடிப்பதற்காக அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்­நாடு தஞ்­சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­கத்­திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்­விற்­காக அனுப்பி வைத்­தனர்.

ஆய்வின் முடிவில் அம்மிக் கல் கிறிஸ்­து­வுக்கு முன் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. ஓட்டுத் துண்­டுகள் சுமார் 25௦௦ ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டவை எனக் கண்டறியப்­பட்­டுள்­ளன.

தஞ்­சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­க கல்­வெட்­டுக்கள் மற்றும் தொல்­லியல் பேரா­சி­ரியர் கலா­நிதி மா. பவானி இதனை ஆய்­விற்கு உட்­ப­டுத்தி இருந்தார்.

தரை­யி­லி­ருந்து நாலடி ஆழத்தில் தோண்­டும்­போதே நான்கு கால்­க­ளை­யு­டைய இந்த அம்­மிக்கல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அத்­துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமா­னி­யர்­களின் நாண­யங்கள் இரண்டாயிரத்து 300 ஆண்­டுகள் பழ­மை­யான சுடு­மண்­ணினால் செய்­யப்­பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்­புப்­பானை ஓடுகள் போன்ற பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வம்­மிக் ­கல்லின் மாதி­ரியை இந்­தியா, தமிழ் நாட்டில் கொடு­மலை, கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் கண்­டெ­டுக்­கப்­பட்ட தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய அம்மிக் கல்­லுடன் ஒப்­பிட்டுப் பார்த்­த­போது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனாலேயே இவ்வகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.




யாழ். கந்தரோடையில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அம்மிக் கல் கண்டுபிடிப்பு Reviewed by Admin on June 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.