தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகம் மன்னாரில் திறப்பு.
மன்னார் பெரியகடை உப்பள வீதியில் அமைந்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாச கட்டிடத்திலேயே தமது அலுவலகம் ஒன்றை திறந்து வைத்துள்ளனர்.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்றனி விக்டர் சோசை,கௌரவவிருந்தினராக மன்னார் பிரதிகல்விப் பணிப்பாளர் லியோன்.றெவல்,சிறப்பு விருந்தினர்கலாக- தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு பொது இணைப்பாளார் திரு.அன்ரனி ஜேசுதாசன், தேசியமீனவஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் திட்ட இணைப்பாளர் லவினாஅசந்தி .பெரேரா,மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாச தலைவர் எம்.எம்.ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் சுனேஸ்.சோசை தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(19-06-2013
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகம் மன்னாரில் திறப்பு.
Reviewed by NEWMANNAR
on
June 19, 2013
Rating:
No comments:
Post a Comment