அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச செயலாளர் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றார்- மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ்

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட உயிலங்களம் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் ஒன்றை உடனடியாக அகற்றுமாறு மன்னார் பிரதேச செயலாளர் மன்னார் பிரதேச சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள போதும் உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாளர் ஒத்துழைப்பை வழங்க வில்லை என மன்னார் பிரதேச சபை குற்றம் சாட்டியுள்ளது.


 இது தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளரை மன்னார் பிரதேச சபையின் தலைவர் உற்பட சக உறுப்பினர்கள் நேரடியாக சென்று சந்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் மன்னார் பிரதேச செயலாளர் அலட்சியப்போக்குடன் செயற்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ் தெரிவித்தார்.


இது தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ் கருத்து தெரிவிக்கையில்,,,

இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளருடன்  கதைப்பதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு சென்று மன்னார் பிரதேச செயலாளருடன் கதைத்தோம்.அப்போது அவர் கூறினார் உரிய அதிகாரிகள் இல்லை.எதிர் வரும் புதன் கிழமை வந்தால் இவ்விடயம் தொடர்பாக கதைக்கலாம் என கூறினார்.

இந்த நிலையில் சென்று மீண்டும் அடுத்த புதன் கிழமை மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு நான் உற்பட கௌரவ உறுப்பினர்களுடன் சென்றோம்.ஆனால் அன்றைய தினமும் எங்களை ஏமாற்றினார்கள்.இந்த நிலையில் மீண்டும் நாங்கள் அனைவரும் இன்று புதன் கிழமை(10-07-2013) மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு சென்றோம்.

ஆனால் பிரதேசச் செயலாளர் இல்லை.இந்த நிலையில் பிரதேசச் செயலாளருக்கு மன்னார் பிரதேச சபையின் தலைவர் என்ற வகையில் தொலைபேசியூடாக தொடர்பை ஏற்படுத்தினேன்.இதன் போது அவர் கூறினார் பிரதேச செயலாளர் என்றால் எனக்கு ஆயிரம் வேலைகள் உள்ளது.நான் எல்லா இடமும் செல்ல வேண்டியுள்ளது.

ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.மன்னார் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்கள் உற்பட 7 பேர் மன்னார் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்தோம்.ஆனால் எங்களுடைய தேவையை கேட்பதற்கு அங்கு ஒருவரும் இல்லை.

உள்ளுராட்சி மன்றத்திற்குற்பட்ட ஒரு சபைக்கு இந்த நிலமை என்றால் சாதாரண பொது மக்களுக்கு என்ன நிலை ஏற்படுகின்றது என்பது தற்போது தெரிகின்றது.எங்களுடைய பிரச்சினை முக்கிய பிரச்சினை ஆனால் அது தொடர்பாக பேசுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் தர வில்லை எனவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் அப்துல் முத்தலிப் முஹமது றிசாபி.....


மன்னார் பிரதேச செயலாளர் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டு வருகின்றார்.நாங்கள் ஒரு விடயத்தை பற்றி பேசுவதற்கு 2 வாரங்களுக்கு மேல் வந்து போகின்றோம்.மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்களின் கடமைகளை செய்ய தடுக்கப்படுகின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு இவர் போன்ற பிரதேச செயலாளர்களினால் பாரிய அவப்பெயரை தோற்றுவித்துள்ளது. எனவே இந்த விடயங்களில் உரிய அதிகாரிகள் செயற்பட்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.





மன்னார் பிரதேச செயலாளர் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றார்- மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ் Reviewed by Admin on July 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.