காப்புறுதி திட்டம்; மன்னார் மீனவரிடையே பதற்றம்
இது தொடர்பாக விசனம் தெரிவித்த கடற்தொழிலாளர்கள், காப்புறுதி செய்தலின் நன்மைகளை தாம் விளங்கியுள்ள போதிலும் ஒரே தடவையில் முழு காப்புறுதி கட்டுப்பணத்தையும் செலுத்த வேண்டுமென நிர்பந்திப்பது நியாயமற்றதென கூறினர்.
காப்புறுதி கட்டுப்பணத்தை தவணை முறையில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் நாட்டின் பல பாகங்களிலும் உண்டான கடல் கொந்தளிப்பு காரணமாக பல உயிர்கள் பலியானதையும் வள்ளங்கள் சேதமடைந்ததையும் கருத்திலெடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மன்னார் உதவி மீன்பிடி பணிப்பாளர் கூறினார்.
காப்புறுதி திட்டம்; மன்னார் மீனவரிடையே பதற்றம்
Reviewed by Admin
on
July 18, 2013
Rating:
No comments:
Post a Comment