தலைமன்னாரில் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு.
தலைமன்னார் பகுதியில் வைத்து கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இரண்டு பேர் கஞ்சா போதைப்பொருள் பொதியுடன் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் மறு நாள் 14 ஆம் திகதி தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த சந்தேக நபர்களை எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தலைமன்னாரில் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு.
Reviewed by Admin
on
July 18, 2013
Rating:

No comments:
Post a Comment