இந்தோனேசியாவில் மீண்டும் நில அதிர்வு
6.4 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில அதிர்வினால் 35 பேர் கொல்லப்பட்டதுடன் , 4 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டு சுமாத்திரா தீவுகளில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 14 நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியிருந்தனர்.
இந்தோனேஷியாவின் பூகோள அமைவிடம் காரணமாக நிலநடுக்கும், எரிமலை குமுறல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி அங்கு ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் மீண்டும் நில அதிர்வு
Reviewed by Admin
on
July 06, 2013
Rating:

No comments:
Post a Comment