காணாமல் போன மாணவனை மீட்டுதருமாறு வவுனியாவில் தொடரும் ஆர்ப்பாட்டம்!மாணவனை மீட்க நடவடிக்கை எடுப்பதாக மன்னார் ஆயர் உறுதியளித்தார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த சிவசூரியன் சனராஜ் என்ற அகவை 17 ஐக் கொண்ட மாணவன், கடந்த மாதம் பதின்மூன்றாந் நாள் பள்ளிக் கூடத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் காணமால்போனதாக முறையிடப்பட்டது.
மாணவனை படையினர் கடத்திச் சென்றதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டார்கள். இது தொடர்பாக ஸ்ரீலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா கிளை அலுவலகத்தில் பள்ளிக்கூட அதிபரும் உறவினர்களும் நேற்று முறையிட்டார்கள்.
மாணவன் காணமால்போனமைக்கும் ஸ்ரீலங்காப் படையினருக்கும் தொடர்புகள் இல்லையென வவுனியா காவல்துறையினர் கூறினார்கள். இதேவேளை போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு செல்லுமாறு மாணவர்களிடம் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுள்ளார். காணமல்போனதாக கூறப்படும் மாணவனை மீட்க நடவடிக்கை எடுப்பதாக ஆயர் உறுதியளித்தார்.
காணாமல் போன மாணவனை மீட்டுதருமாறு வவுனியாவில் தொடரும் ஆர்ப்பாட்டம்!மாணவனை மீட்க நடவடிக்கை எடுப்பதாக மன்னார் ஆயர் உறுதியளித்தார்.
Reviewed by Admin
on
July 11, 2013
Rating:

No comments:
Post a Comment