வவுனியா விபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி; நால்வர் காயம்
குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி வாகனம், வீதிக்கு குறுக்காக பயணித்துக்கொண்டிருந்த பிரதேசவாசி ஒருவர் மீது மோதிவிடாமல் வீதியோரமாக நிறுத்திவிட்டு மீண்டும் பயணிக்க ஆரம்பிக்கும் தருவாயில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான வாகனம், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில், கிளிநொச்சி படைத் தலைமைகயத்தின் 24ஆம் கெமுனு படைப்பிரிவைச் சேர்ந்த கேணசேகர (வயது 29) மற்றும் அதே படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 20ஆவது கஜபா றெஜிமண்டைச் சேர்ந்த தென்னகோன் (வயது 25) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நான்கு இராணுவ வீரர்களும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
வவுனியா விபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி; நால்வர் காயம்
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:

No comments:
Post a Comment