மாந்தை கிழக்கில் பிரதேச வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன
இதற்கான சகல ஒழுங்குகளையும் பிரதேச சபை தவிசாளர் மேற்கொண்டுள்ளார். மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களின் நலன் கருதி மின்சார விநியோகம் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
பரந்துபட்ட பிரதேசமான மாந்தை கிழக்கிலுள்ள வன்னி விளாங்குளம், அம்பாள்புரம், கொல்லவிளாங்குளம், ஒட்டறுத்தகுளம், பாலிநகர், சிவபுரம், செல்வபுரம், பாண்டியன்புரம், நெட்டாட்டான் குளம் ஆகிய ஒன்பது கிராமங்களுக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பல குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளன. மின்சார விநியோகம் செய்யப்பட்டுள்ள பிரதான வீதிகளுக்கு 5 இலட்சம் ரூபா செலவில் நூறு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான சகல ஒழுங்குகளையும் தவிசாளர் மேற்கொண்டுள்ளார்.
மாந்தை கிழக்கில் பிரதேச வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன
Reviewed by Admin
on
July 26, 2013
Rating:

No comments:
Post a Comment