திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைப் பெண்ணும் மகளும் விடுதலை
கடந்த 4.3.2012 இல் கச்சதீவில் இடம்பெற்ற அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் பங்கேற்று திரும்பிய இராமேஸ்வரம் பக்தர்களின் படகில் திருகோணமலையைச் சேர்ந்த உஷா (32 வயது), மகள் நீரா (6வயது) கள்ளத்தனமாக ஏறி இராமேஸ்வரம் சென்றனர்.
இருவரையும் கடவுச்சீட்டு சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். கடந்த 6 மாதமாக மண்டபம் முகாமில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று இராமேஸ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கைப் பெண்ணான உஷாவை விடுதலை செய்ததுடன், 50 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் சரவணகுமார் தீர்ப்பளித்தார். இதையடுத்து இருவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைப் பெண்ணும் மகளும் விடுதலை
Reviewed by Admin
on
July 26, 2013
Rating:

No comments:
Post a Comment