கடற்தொழிலாளர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வெளிமாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு பிரதேசத்தில் மீன்பிடித்தலில் ஈடுபடுதலை தடுத்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி முல்லைத்தீவில் கடற்தொழிலாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர்கள், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார்கள் என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் வேதநாயகத்தின் எழுத்து மூலமான உறுதியளித்ததை அடுத்து கடற் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று அங்குள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் முல்லை மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அருள் ஜெனிபெட் கருத்துத் தெரிவிக்கையில்,
"முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது இதுவரை நடைபெற்ற எந்த ஒரு போராட்டத்திற்கும் மாவட்ட செயலாளர் எழுத்து மூலமான உறுதிமொழியை வழங்கவில்லை.
எனினும் எதிர்வரும் 17ஆம் திகதி முல்லைத்தீவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் ஆகியோர் வருகை தந்து இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற உறுதிமொழி மாவட்ட செயலாளர் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக இந்த போராட்டத்தினை நிறைவு செய்துள்ளளோம். 17ஆம் திகதி இதற்கு ஒரு தீர்வு காணப்படவிட்டால் பாரிய அளவில் எங்கள் போராட்டத்தினை நாங்கள் முன்னெடுக்கவுள்ளளோம்" என்றார்.
கடற்தொழிலாளர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Reviewed by Admin
on
July 11, 2013
Rating:

No comments:
Post a Comment